Tuesday, June 23, 2009

நான் ஏன் பதிவரானேன் ???



இதை படிக்க போகிறவர்கிளில் பல பேர் பல வகையில் என்னை தெரிந்தவர்கள், ஒரே பதிலில் அவர்களை திருப்தி செய்ய முடியாது என்று எனக்கு நல்லா தெரியும், மேலும் என்னை பற்றி நன்றாக தெரிந்தவர்கள் நான் ஒரு கேள்விக்கு ஒரு பதிலை சொன்னால் நம்ப மட்டார்கள்..ஆகையால் நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் உங்களால் என் பதிலாய் பொருத்தி கொள்ள முடிந்த பதிலை...

1. 'படிச்சது போதும் பேனாவ எடுன்னு' அடிக்கடி கேட்கும் ஒரு அசிரீரி...கடைசியாய் கேட்ட குரல் மறைந்த நம் வாத்தியார் சுஜாதா அவர்களுடையதாகத்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் கேட்டது அவருடைய பதிவுகளை படிக்கும் பொது தானே.. அவரின் பதிவு என்று நான் சொல்லுவது கணையாழியின் கடைசி பக்கங்களை.. கண்டிப்பா தமிழ் பதிவர்களுக்கு அவர்தான் முன்னோடி (என் சி.அறிவுக்கு எட்டிய வரையில்..)

2. தமிழ் மேல அப்படி ஒரு காதல். ஆறாம் வகுப்பு மனப்பாட செய்யுள் எல்லாம் மறக்காத அளவுக்கு காதல் :)) வாழ்கையில கண்டிப்பா ஒரு நாவல் /கதை /புத்தகம் எழுதிடணும்னு ஒரு வெறி. அதுக்கு பதிவுலகம் நல்ல பட்டறை என்ற எண்ணம்...

3. இன்னும் சில வருடங்களில் (தமிழ்) பதிவுலகம் எட்ட போகும் வீச்சும் விஸ்தீரணமும் பிரமாண்டமாய் இருக்கும் என்ற ஒரு முன்னறிதலில்...நாமும் ஒரு கடை விரித்தால் கொஞ்சம் கல்லா கட்டலாமே என்ற நப்பாசையில் ...

4. Social Networking, Blog Marketing இத்யாதி இத்யாதி னு பல பேருக்கு மொக்கை போடுற நாம இந்த களத்தில இறங்காமலே இருந்தா கூடிய விரைவில் ஆட்டத்த விட்டு வெளி ஏற்றி விடுவார்களென்ற முன் ஜாக்கிரதையில்...

5. நிஜமாவே உங்கட்ட பதிவா போட நிறைய மேட்டர் இருக்குன்னு அடிக்கடி நிறைய பேர் சொல்ல கேட்டதால் ..சரி அதையும் தான் சோதிச்சு பாத்திருவோமே னு ஒரு தம் கட்டி குதிச்சாச்சு.. அனுபவ பகிர்வுக்கு அற்புதமான ஒரு தளம் பதிவுலகம்..

6. அட இந்த சிறு கதை போட்டியில கலந்துக்க ஆசை வந்திருச்சின்னு சுருக்கமா சொல்லிட்டு கதை எழுத அல்லது கருத் தேட ஆரம்பிப்போமே ..

7. கடந்த சில நாளா பொழுது போகாம வெட்டி நேரம் நிறைய இருக்குன்னு நினைக்கிறேன் ..உலக 20 20 வேற முடிஞ்சுருச்சு ..வர வர கிரிக்கெட் டே சலிப்பா இருக்கு..

8. உண்மைய சொல்லனும்னா ரசனைக்காரி அவர்களுக்கு ஒரு எதிர் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்று தான் எண்ணம்..எப்ப பாத்தாலும் பதிவு ..கதை போட்டி அப்படின்னு நம்மள கவனிக்கவே மாட்டேன் என்கிறார் ...கொஞ்சம் நாமளும் தான் பழி வாங்குவோமே...

அப்பாடா நிறைய காரணங்களை (வரிசை கண்டிப்பாக முக்கியத்துவத்தின் அடிப்படையில் அல்ல..) அடுக்கி யாச்சு. அதுவும் நல்ல நல்ல காரணங்களாய் தான் தெரியுது. ஆகையால் அடுத்தடுத்த பதிவுகளை விரைவில் எதிர் பாருங்கள் .. வாரம் ஒன்னு போதும்னு சக்கரை அவர்கள் வேற எச்சரித்திருக்கிறார் அதையும் கவனத்தில் வெச்சுக்க வேண்டும் ...

உங்களின் ஆதரவிற்கு நன்றி ஆரம்பத்திலேயே ..

நன்றி
ரசனைக்காரன்...

17 comments:

நாமக்கல் சிபி said...

முதல் பின்னூட்டம் என்னுதா?

நாமக்கல் சிபி said...

//உண்மைய சொல்லனும்னா ரசனைக்காரி அவர்களுக்கு ஒரு எதிர் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்று தான் எண்ணம்..எப்ப பாத்தாலும் பதிவு ..கதை போட்டி அப்படின்னு நம்மள கவனிக்கவே மாட்டேன் என்கிறார் ...கொஞ்சம் நாமளும் தான் பழி வாங்குவோமே.//

நாங்களெல்லாம் எதிர் கவுஜ மட்டும்தான் எழுதுவோம்! எதிர் வலைப்பூவேவா!
நடத்துங்க!
வாழ்த்துக்கள்!

Gokul said...

வாங்க சிபி.
//நாங்களெல்லாம் எதிர் கவுஜ மட்டும்தான் எழுதுவோம்! எதிர் வலைப்பூவேவா!
நடத்துங்க!
வாழ்த்துக்கள்!
//

வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றி

Rajeswari said...

அவரின் பதிவு என்று நான் சொல்லுவது கணையாழியின் கடைசி பக்கங்களை.. கண்டிப்பா தமிழ் பதிவர்களுக்கு அவர்தான் முன்னோடி (என் சி.அறிவுக்கு எட்டிய வரையில்..)//

உண்மைதான்.நானும் அப்புத்தகத்தை படித்திருக்கிறேன்..தமிழ் பதிவர்களுக்கெல்லாம் முன்னோடி அவர்தான்

Rajeswari said...

உண்மைய சொல்லனும்னா ரசனைக்காரி அவர்களுக்கு ஒரு எதிர் வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்று தான் எண்ணம்..எப்ப பாத்தாலும் பதிவு ..கதை போட்டி அப்படின்னு நம்மள கவனிக்கவே மாட்டேன் என்கிறார் ...கொஞ்சம் நாமளும் தான் பழி வாங்குவோமே...//

ஒரு நல்ல விசயத்திற்காக பழிவாங்குதல் என்பதால் மன்னிக்க படுகிறது...

Rajeswari said...

ஆகையால் அடுத்தடுத்த பதிவுகளை விரைவில் எதிர் பாருங்கள் .. வாரம் ஒன்னு போதும்னு சக்கரை அவர்கள் வேற எச்சரித்திருக்கிறார் அதையும் கவனத்தில் வெச்சுக்க வேண்டும் ...
//

அப்போ வாரம் ஒரு பதிவா...நடத்துங்க ..நடத்துங்க...
வாழ்த்துக்கள் கோகுல்..

வால்பையன் said...

பதிவுலகம் உங்களை மலர் தூவி வரவேற்கிறது!

வாங்க வந்து கலக்குங்க!

RAMYA said...

வாங்க வாங்க வந்து இந்த ஜோதியிலே ஐக்கியம் ஆகுங்க :))

உங்கள் வரவு நல்வரவு ஆகுக!

RAMYA said...

பதிவுலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வாழ்த்துக்கள் !!

தமிழ் அமுதன் said...

வாங்க மாப்ளே வாங்க! வரும்போதே அசத்தலாவும் அதிரடியாகவும் வர்றீங்க!
வந்து கலக்குங்க! ;;)

தமிழ் அமுதன் said...

;;)

Gokul said...

Rajeswari said...
//உண்மைதான்.நானும் அப்புத்தகத்தை படித்திருக்கிறேன்..தமிழ் பதிவர்களுக்கெல்லாம் முன்னோடி அவர்தான்//

//ஒரு நல்ல விசயத்திற்காக பழிவாங்குதல் என்பதால் மன்னிக்க படுகிறது...//

//அப்போ வாரம் ஒரு பதிவா...நடத்துங்க ..நடத்துங்க...
வாழ்த்துக்கள் கோகுல்..//

பதிவுக்கு பின்னூட்டம் இட மட்டும் நேரம் கிடைக்குது பாருங்களேன் உங்களுக்கு...இதுவும் நல்லா தான் இருக்கு...
சும்மா :)) நன்றி கருத்துக்கும் அறிமுகங்களுக்கும்..

Gokul said...

//வால்பையன் said...
பதிவுலகம் உங்களை மலர் தூவி வரவேற்கிறது!

வாங்க வந்து கலக்குங்க
//

நன்றி வால்பையன் அவர்களே..

ஒரு கலக்கு கலக்கி கலங்கடிப்பதுவே இலக்கு...

Gokul said...

//RAMYA said...
வாங்க வாங்க வந்து இந்த ஜோதியிலே ஐக்கியம் ஆகுங்க :))

உங்கள் வரவு நல்வரவு ஆகுக!//

//பதிவுலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வாழ்த்துக்கள் !!//

வந்துட்டேண்..வந்துட்டேண்...

நன்றி ரம்யா அவர்களே..

Gokul said...

//ஜீவன் said...
வாங்க மாப்ளே வாங்க! வரும்போதே அசத்தலாவும் அதிரடியாகவும் வர்றீங்க!
வந்து கலக்குங்க! ;;)//

நன்றி ஜீவன்..அசத்தலும் அதிரடியும் உற்சாகத்தை தருது... கண்டிப்பா கல்க்கிருவோம்..

அப்பாவி முரு said...

ரசனைக்காரி ராஜேஸ்வரிக்கு எதிர்பதிவா?

அப்பு, அவங்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

எச்சரிக்கை கலந்த வாழ்த்துகள்!!

ம்ம்... ம்ம்...

நடக்கட்டும், நடக்கட்டும்.

தேவன் மாயம் said...

எதிர் கவுஜ மாதிரி எதிர் வலைப்பூவா?
கலக்குங்க!!